×

புதுகையில் திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு கூண்டு அமைப்பு

புதுக்கோட்டை, நவ.13: புதுக்கோட்டையில் 6 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக திருவள்ளுவர் குறித்த சர்ச்சை நிலவி வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் திருக்குறள் கழகம் சார்பாக 6 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை நின்ற கோலத்தில் உள்ளது. இதற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக திருவள்ளுர் கழகம் சார்பில் இரும்பு கூண்டு 7 அடி உயரத்தில் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிலைக்கு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Thiruvalluvar ,
× RELATED கன்னியாகுமரியில் இருளில் மூழ்கும் திருவள்ளுவர் சிலை