×

கந்தர்வகோட்டை ஆபத்சகாஈஸ்வரர் கோயிலில் அன்னாபிசேகம்

கந்தர்வகோட்டை, நவ.13: கந்தர்வகோட்டை ஆபத்சகாஈஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிசேகம் நேற்று நடைபெற்றது.வருடந்தோறும் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவன் ஆலயங்களில் அன்னத்தினால் அபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் இரண்டு நாட்கள் வழிபாடு நடத்தப்பட்டது. சில சிவன் கோயில்களில் நேற்று முன்தினமும், சில கோயில்களில் நேற்றும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னாபிசேகத்தோடு காய்கறிகள் கொண்டும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்திலிருந்து திரளான பக்தர்கள் இந்த அன்னாபிஷேக விழாவில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Tags : Khadargakottai Abhayasakheeswarar ,
× RELATED தமிழகத்தில் கண்டும், காணாமல் விடப்பட்டதால் பறிபோகும் கோயில் நிலங்கள்