×

அன்னமங்கலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர்,நவ.13:அன்னமங்கலம் கிராமத்தில் குழந் தைகள் பாதுகாப்பு தொடர் பான விழிப் புணர்வுப் பேரணி நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்ன மங்கலம் கிராமத் தில், கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு கூட்ட உறுப்பினர்கள் மூலம், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்ட சமூகப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு எனப்படும் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் சார்பாக, கிராம அளவிலான குழந்தைப் பாதுகாப்புக் குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவில் ஊராட்சி மன்றத் தலைவர், கிராமநிர்வாகஅலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், அங்கன்வாடி பணியாளர், கிராம செவிலியர், மாணவ பிரதிநிதி, தொண்டு நிறுவனபணியாளர், மற்றும் சுய உதவி குழு உறுப்பினர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஊராட்சியிலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இக்குழுசார்பில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் குழந்தைக ளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோ சிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.இதன்படி பெரம்பலூர் மாவட்டம்,வேப்பந்தட்டை தாலுக்கா, அன்னமங்கலத்தில் உள்ள கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு கூட்ட உறுப்பினர்களின் மூலம் சிறுமலர் மேல்நிலை ப்பள்ளி மாணவ மாணவிக ளை வைத்து குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாது காப்பு குறித்து அன்னமங் கலம் கிராமத்தில் விழிப்பு ணர்வு பேரணி நடத்தப்பட் டது. இப்பேரணியில் அன்னமங்கலம் சிறுமலர் மேல் நிலைப்பள்ளி உதவி தலை மை ஆசிரியர் பெலிக்ஸ், கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியசாமி, தலைவர் ராமச்சந்திரன், குழந்தை பாதுகாப்பு அலகு புறத் தொடர்பு பணியாளர் வனி தா வசந்தகுமாரி, வேப்பந்த ட்டை ஒன்றியக் குழு முன்னாள் சேர்மன் விஜயலட் சுமி, அங்கன்வாடி பணியா ளர்கள், வேர்ல்டு விஷன் தொண்டு நிறுவன களப்ப ணியாளர்கள் , சிஎஸ்ஐ தொடக்கப் பள் ளி ஆசிரியர் சுய உதவிக்குழு உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Tags : Child protection awareness rally ,Annamangalam ,
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...