×

கட்டிமேடு அரசு பள்ளியில் தேசிய கல்வி தினம் கொண்டாட்டம்

திருத்துறைப்பூண்டி, நவ.13: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசியகல்விதினம் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் பாலு தலைமை வகித்தார். ஆசிரியை உஷா வரவேற்றார்.பெற்றோர் ஆசிரியர் ழகதலைவர்.அப்துல்முனாப், பொருளாளர் பக்கிரிசாமிஆகியோர் முன்னிலைவகித்தனர்.இதில் மன்னை ராஜகோபாலசுவாமி அரசு கலைக் கல்லூரிஉதவிப் பேராசிரியர் முருகானந்தம் பேசுகையில். இந்திய நாட்டின் முதல் கல்விஅமைச்சரான மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான நவம்பர் 11ம் தேதியை தேசிய கல்வி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த தேசியகல்விதினத்தில் மாணவர்கள் சிறப்பாக படித்து கல்வியின் சிறப்புகளை ஆராய்ந்து தன்னை வளர்த்துக்கொள்ள இந்நாளில் சபதம் ஏற்போம் என்றார்.நிகழ்ச்சியையொட்டி பேச்சுப் போட்டி, கவிதைவாசித்தல் போட்டி, கட்டுரைப்போட்டி, நடத்தப்பட்டு வெற்றி பெற்றமாணவமாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் ஆசிரியை கீதா நன்றிகூறினார்.Tags : National Education Day Celebration ,Kattimadu Government School ,
× RELATED கட்டிமேடு அரசு பள்ளியில் தேசிய அறிவியல் தினம்