×

கட்டிமேடு அரசு பள்ளியில் தேசிய அறிவியல் தினம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 2: திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பாலு தலைமை தாங்கி பேசுகையில், உலகம் நாளுக்கு நாள் பல கண்டுபிடிப்புகளினாலும் அறிவியல் முன்னேற்றங்களினாலும் வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் தேசிய அறிவியல் தினம் முக்கியமான நாளாக கருதப்பட்டு அனைத்து வருடமும் ஒரு கருத்தை முன்னிறுத்திக் கொண்டாடப்படுகிறது.

இந்த வருடத்துக்கான அறிவியலுக்காக மக்கள், மக்களுக்காக அறிவியல் மேலும் இந்நாள் கொண்டாட காரணமாக இருந்தவர் சி.வி.ராமன். 1928ம் ஆண்டு ராமனால் கண்டுபிடிக்கப்பட்ட ராமன் விளைவு என்றார். இதில் கட்டிமேடு ஊராட்சி மன்றத் தலைவர் மாலினி ரவிச்சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அப்துல்முனாப், பொருளாளர் சின்னப்பா, துணைத் தலைவர் அருளானந்தசாமி, அறிவியல் ஆசிரியர்கள் முகுந்தன், தனுஜா, ராஜேஷ்குட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். தேசிய அறிவியல் தினத்தை தினத்தையொட்டி வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் ஆசிரியர் ரகு நன்றி கூறினார்.

Tags : National Science Day ,Kattimadu Government School ,
× RELATED பள்ளி மாணவிக்கு சிஇஓ பாராட்டு