×

பஸ் நிலையத்தில் ஏசி பஸ்கள் இயக்கும் விழா பயணிகளை 3மணி நேரம் அலைக்கழித்த போலீசார்

திருவள்ளூர்: திருவள்ளூர் பஸ் நிலையத்தில் தற்போது 12 பஸ்கள் மட்டுமே நின்று செல்லும் வகையில் பஸ் நிலையம் குறுகலாக உள்ளது. இந்நிலையில், புதிய ஏ.சி., பஸ்களை இயக்கும் நிகழ்ச்சியை அதிகாரிகள் பஸ் நிலையத்துக்குள்  வைத்துக்கொண்டதால், வெளியூர் செல்லும் கிராமப்புற பயணிகள் 3 மணி நேரம் பஸ்கள் நிற்கும் இடம் தெரியாமல் தவித்தனர். திருவள்ளூர் பஸ் நிலையத்தில், குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய 11 பஸ்களை அமைச்சர்கள் பா.பென்ஜமின், க.பாண்டியராஜன், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், எம்எல்ஏ சிறுணியம் பி.பலராமன் ஆகியோர் நேற்று துவக்கி வைத்து,  வழித்தடங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனால், காலை 8 மணி முதல் அனைத்து பஸ்களையும், பயணிகளையும் பஸ் நிலையத்தில் இருந்து போலீசார் வெளியேற்றினர். தொடர்ந்து புதிய பஸ்கள் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. மற்ற பஸ்கள் ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தி  பயணிகளை ஏற்றிச் சென்றனர்.

இதனால், பஸ்கள் எங்கு நிற்கிறது என தெரியாமல் கைக்குழந்தைகளுடன் பயணிகள் அலைந்தனர். விழா முடிந்தபிறகு, பகல் 12 மணிக்கு அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. இதனால், காலை 9 மணி முதல் 12  மணி வரை 3 மணி நேரம் பயணிகள் அலைக்கழிக்கப்பட்டனர்.பின்னர், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘’திருவள்ளுர் மாவட்டத்திற்கென தனியாக ஒரு மண்டலம் ஆகஸ்ட் 2008 முதல் 5 பணிமனைகளுடன் 252 பஸ்களுடன் திருவள்ளுரை தலைமையிடமாக கொண்டு இயங்கி  வருகின்றது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம், திருவள்ளுர் மண்டலம் மூலம் 74 நகர பஸ்கள், 155 புறநகர் பஸ்கள், 23 மாற்று பஸ்கள் என தற்பொழுது 252 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இதில் 59 புதிய பஸ்கள் ஆகும்.  தற்போது ரூ.3.30 கோடி செலவில் 11 பஸ்கள் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன வசதியுள்ள பஸ்களாக மக்கள் பயன்பெறும் வகையில் இயக்கப்படுகிறது’’ என்றார். இதிலிருந்து, கடந்த 2008ல் இயங்கிய 252 பஸ்கள்தான், 2019லும் இயங்குவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக மாவட்டத்தில் மக்கள் தொகை கூடியும், கூடுதல் அரசு பஸ்களை மாவட்ட நிர்வாகம் இயக்கவில்லை’’ என  பயணிகள் பேசிக்கொண்டனர்.


Tags : bus station ,passengers ,AC ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்