×

திருவில்லிபுத்தூர் அருகே குடிமராமத்து நடந்த கண்மாயில் சீரமைக்கப்படாத மடைப்பகுதி

திருவில்லிபுத்தூர், நவ. 12: திருவில்லிபுத்தூர் அருகே, குடிமராமத்து நடந்த கண்மாயில் மடைப்பகுதியை சீரமைக்காததால், தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருவில்லிபுத்தூர் அருகே வலையன்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மூலம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் விவசாயம் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக திருவில்லிபுத்தூர் பகுதியில் பெய்த மழையால் கண்மாயில் நீர் நிரம்பியுள்ளது. இந்த கண்மாயில் சமீபத்தில் ரூ.பல லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணி மேற்கொண்டனர். ஆனால், மடைப்பகுதியை சீரமைக்கவில்லை. இதனால், மடை ஷட்டர் பகுதியில் உள்ள துளைகள் வழியாக தண்ணீர் வீணாகி வெளியேறி வருகிறது. இதனால், கண்மாய் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள், வலையன்குளம் கண்மாயில் மடைப்பகுதியை சீரமைக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tiruviliputhur ,
× RELATED தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு