×

நயினார்பேட்டையில் 28 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய ஊருணி

திருப்புவனம், நவ.12 : திருப்புவனம் அருகே நயினார்பேட்டையில் உள்ள ஊருணி 28 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருப்புவனம் பகுதியில் பல்வேறு இடங்களில் குடிமராமத்து பணி நடந்தது. இதில் தூர்ந்துபோன கண்மாய், குளம், ஊருணிகள் தூர்வாரப்பட்டன. கண்மாயின் மடைகள், கலுங்குகள் கட்டப்பட்டன. இதனால் தற்போது பெய்த மழையால் கண்மாய்களில் நீர் நிரம்பி வருகிறது. திருப்புவனம் அருகே நயினார்பேட்டை நாயக்கர் ஊருணி கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக தூர்ந்து போய் கிடந்தது. திருப்புவனம் நரிக்குடி சாலையின் ஓரத்தில் உள்ள இந்த ஊருணியை குடிமராமத்து திட்டத்தில்  தூர்வார சிவகங்கை கலெக்டர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நாயக்கர் ஊருணி தூர்வாரப்பட்டது. இதனால் தற்போதைய மழையால் ஊருணி மழை நீராலும் கண்மாயிலிருந்து வரும் தண்ணீராலும் நிரம்பி வருகிறது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
× RELATED செப்.28-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்...