×

அந்தியூர் அருகே சாலையை சீரமைக்க கோரி மறியல்

அந்தியூர், நவ.12: அந்தியூர் அருகே சாலையை சீரமைக்க கோரி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சமத்துவபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள சாலைகள் பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. இதில், மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப் பகுதி மக்கள், சாலையை சீரமைக்க கோரி அந்தியூர் புதுக்காடு சாலை சமத்துவபுரம் பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்ஐ பிரபு, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா, மைக்கேல்பாளையம் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோரை மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சமத்துவபுரம் பகுதியில் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். மறியல் போராட்டதால் அப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : road ,Anthiyur ,
× RELATED அந்தியூர் வனச்சரகத்தில் விரைவில் சூழல் சுற்றுலா