×

சிதம்பரத்தில் ஐயப்ப தர்ம பிரசார ரத யாத்திரைக்கு சிறப்பு வரவேற்பு


சிதம்பரம், நவ. 12: சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் ஐயப்ப தர்ம பிரசார ரத யாத்திரை கடந்த அக்டோபர் மாதம் 10ம்தேதி சென்னையில் தொடங்கியது. இந்த ரதம் தமிழகம் முழுவதிலும் ஐயப்பன் விக்ரகத்துடன் கிராமம், கிராமமாக செல்கிறது. நேற்று முன்தினம் இந்த ரதம் சிதம்பரம் வருகை தந்தது. நேற்று காலை சிதம்பரம் அருகே வல்லம்படுகை சென்ற ரதத்திற்கு ஏராளமானோர் ஐயப்பனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். பின்னர் சிதம்பரம் நடராஜர் கோயில் கீழ கோபுரம் அருகே வந்த ரதத்துக்கு ஐயப்ப பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் விழுப்புரம் மாவட்டம் வழியாக ரதம் சபரிமலைக்கு புறப்பட்டது.


Tags : Special Welcome to Iyappa Dharma Prasara Ratha Yatra ,Chidambaram ,
× RELATED சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிக்கு புயல் எச்சரிக்கை