×

தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய கடை உரிமையாளர்கள்

திருச்சி, நவ.12: திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கடை உரிமையாளர்கள் அகற்றினர். கல்லுக்குழி ரயில்வே மேம்பாலத்தில் இருந்து டிவிஎஸ் டோல்கேட் வரை உள்ள சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அங்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடை உரிமையாளர்களுக்கு நெடுஞ்சாலைத் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று இரவு கடை உரிமையாளர்கள் தங்கள் கடையின் முன்புள்ள ஆக்கிரமிப்புகளை கடை உரிமையாளர்கள் அகற்றி கொண்டனர்.

Tags : Shop owners ,
× RELATED மேலக்கோட்டையூரில் பரபரப்பு நிலம்...