×

மாதாந்திர பராமரிப்புக்காக இலுப்பூர், பாக்குடி, அன்னவாசல் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

விராலிமலை, நவ. 12: இலுப்பூர், பாக்குடி, அன்னவாசல் மற்றும் விராலிமலை, வடுகப்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (12ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை மின் விநியோகம் இருக்காது.இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:பாக்குடி துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான புங்கினிப்பட்டி, இருந்திராபட்டி, பாக்குடி, விளாபட்டி, மாங்குடி, மருதம்பட்டி, இராப்பூசல், லெக்கனாப்பட்டி மற்றும் பையூர் ஆகிய பகுதிகளிலும்.இலுப்பூர் துணை மின் விநியோகம் பெறும் பெறும் பகுதிகளான இலுப்பூர். ஆலத்தூர், பேயால், கிளிக்குடி, எண்ணை, தளுஞ்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு மலைக்குடிபட்டி, மற்றும் கொடும்பாளுர் ஆகிய பகுதிகளிலும்,அன்னவாசல் துணை மின் நிலையத்தில் இருந்து விநியோகம் பெறும் அன்னவாசல் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி, செங்கப்பட்டடி, காலடிப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, புதூர், தச்சம்பட்டி, வௌ;ளஞ்சார், கீழக்குறிச்சி, சித்தன்னாவசல், மற்றும் பிராம்பட்டி, ஆகிய பகுதிகளிலும்விராலிமலை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான விராலிமலை ராஜாளிப்பட்டி கொடும்பாளூர், கோமங்கலம், தேன்கனியூர், சீத்தப்பட்டி, பொய்யாமணி, நம்பம்பட்டி. செவனம்பட்டி ஆகிய பகுதிகளுக்கும்,விராலிமலை - வடுகப்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகதிகளான வேலூர்,கத்தலூர், குளவாய்பட்டி, முல்லையூர், புதுப்பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி, சூரியூர், திருல்லூர், மதயாணைப்பட்டி, சாத்திவயல். பேராம்பூர், கல்லுப்பட்டி, மலம்பட்டி. ஆலங்குடி, சீத்தாம்பூர் மற்றும் வளதாடிப்பட்டி பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.Tags : Iluppur ,Pakkudi ,Annavasal ,
× RELATED பண்ருட்டி அருகே மின்னல் தாக்கி அக்கா-தம்பி பரிதாப பலி