×

ஆய்வு செய்தால் கோடி பிடிபடும்

இதுகுறித்து என்.பஞ்சம்பட்டியை சேர்ந்த மக்கள் கூறுகையில், ‘ஆத்தூர் ஒன்றியத்தில் கடந்த 6ம் மாதம் அதிரடியாக 8 கிராம ஊராட்சிகளில் ஆய்வு செய்தது போல் மீதமுள்ள 14 ஊராட்சிகளிலும் மாவட்ட கலெக்டர் மற்ற ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அதிகாரிகளை கொண்டு ஆய்வு நடத்தினால் ஆத்தூர் ஒன்றியத்தில் மட்டும் 100 நாள் வேலையில் கோடி கணக்கில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தெரியவரும்.

மேலும் உறவினர்கள், அரசு பணியாளர்களுக்கு பயனாளிகள் அட்டை வழங்கியிருப்பது தெரியவரும். இவ்வளவு முறைகேடுகள் நடைபெற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிர்ச்சியை அளித்து வருகிறது. எனவே கிராமப்புற மக்களை வாழவைக்கும் இந்த திட்டம் சீர்குலையாமல் இருக்க திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அதிரடியாக நடவடிக்கை எடுத்து ஊராட்சி செயலர் மற்றும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்’ என்றனர்.

Tags : Cody ,
× RELATED ஹீரோ ஆனார்கள் கோபி, சுதாகர்