×

தண்டவாள பராமரிப்பு பணி தீவிரம்

திருப்பூர், நவ.8:  திருப்பூர்-கோவை செல்லும் ரயில் தண்டவாளத்தை பராமரிப்பு பணிகளில் நவீன இயந்தரங்களுடன் ரயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டனர். திருப்பூர் வழியாக கோவை, சென்னை, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு 90 க்கு மேற்பட்ட தொலை துார ரயில்களும், 10க்கு மேற்பட்ட பாசஞ்சர் ரயில்கள் செல்கின்றன. இரும்பு தண்டவாளங்கள் பொருத்தப்பட்டுள்ள கான்கிரீட் துாண்கள் உறுதி தன்மையோடு உள்ளதா?,  தண்டவாளங்கள் கான்கிரீட் தூணுடன் இணைக்கப்பட்டுள்ள கம்பிகள் இருக்கமாக உள்ளதா?  என்பது குறித்து ரயி்ல்வே பணியாளர்கள் பலர் தினமும் தண்டவாள பாதையில் நடந்து சென்று ஆய்வு செய்வது வழக்கம். இதில் ஏதானும் குறைபாடுகள் இருப்பின் நவீன இயந்தரங்கள் வரவழைக்கப்பட்டு சரி செய்கின்றனர்.

திருப்பூர்-கோவை-ஈரோடு மார்க்கமாக செல்லும் ரயில் பாதைகள் உறுதிதன்மையாக இருக்க புதிய கற்களை பரப்பி, கம்பிகள் பொறுத்தி ரயில்பாதையை உறுதிப்படுத்தும் பணிகளில் ரயில்வே தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டனர். இதனால் தண்டவாளம் பராமரிக்கும் பணிகள் நடக்கும் இடங்களில் அனைத்து ரயில்களும் மெதுவாக செல்ல ரயில் டிரைவர்களுக்கு கோட்ட பொறியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல்...