×

ஆட்டோ கவிழ்ந்து 5 பேர் காயம்

திருப்புவனம், அக். 23: திருப்புவனம் அருகே, ஷேர் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர். திருப்புவனம் அருகே உள்ள மேலராங்கியத்தை சேர்ந்த ஊர்காவலன், திருப்புவனத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று காலை மேலராங்கியத்தில் இருந்து ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்புவனம் வந்து கொண்டிருந்தார். நைனார்பேட்டை ஊருணி அருகே, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் மேலராங்கியத்தை சேர்ந்த லலிதா, லட்சுமி, தனலெட்சுமி உட்பட 5 பேர் காயமடைந்தனர். 3 பேர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இது குறித்து திருப்புவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : auto overturns ,
× RELATED சரக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி