×

தெலுங்கானா அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

மதுரை, அக். 23: தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பணி நீக்கத்தை கண்டித்து,, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம் நேற்று மதுரையில் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி, சமூக வலைதளத்தில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களை மிரட்டும் போக்கில் பேசியுள்ளார். இதை அரசு ஊழியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. கலெக்டரின் பேச்சால், மாவட்ட ஊழியர்கள் அச்சத்தின் பிடியில் உள்ளனர்.கலெக்டர் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். தெலுங்கானா மாநில அரசு போக்குவரத்து ஊழியர்கள் 26 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 8ம் தேதி அவர்களை வேலை நீக்கம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை அழைத்து பேசி பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும்.இதுதொடர்பாக அந்த மாநில அரசின் முதல்வர், கவர்னருக்கு கடிதம் அனுப்பவும், நாளை(இன்று) மாநில அளவில் மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட செயலாளர் நீதிராஜா, இணைச்செயலாளர் மகேந்திரன் உடனிருந்தனர்.

Tags : Tamil Nadu State Employees Union ,
× RELATED தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அரசாணை 56 நகல் எரிப்பு போராட்டம்