×

விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் g ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நல சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

கரூர், அக். 23: விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நல சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் கரூர் மாவட்ட கிளை செயற்குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் காத்தமுத்து வரவேற்றார். ராமசாமி, பிச்சுமணி உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் மத்திய அரசுபோல மாநில ஓய்வூதியர்களுக்கும் ஜூலை முதல் 5 சதவீதம் அகவிலைப்படி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, பொங்கலுக்கு ஓய்வூதியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், பொங்கல் போனஸ், கருணைத் தொகை வழங்க வேண்டும். விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Diwali ,
× RELATED விழிப்புணர்வு முகாம்