×

விபத்தில்லா தீபாவளி கொண்டாட மாணவர்களுக்கு விழிப்புணர்வு நலக்கல்வி

இலுப்பூர், அக்.23: இலுப்பூர் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நலக்கல்வி அளிக்கப்பட்டது.இலுப்பூர் அருகே உள்ள மேலப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் இலுப்பூர் தீயணைப்பு துறையின் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) மகேந்திரன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்கத்துடன் விழிப்புணர்வு நலக்கல்வி வழங்கினார். அதை தொடர்ந்து இலுப்பூர் கடைவீதி, பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Tags : Celebrate Accident Diwali ,
× RELATED தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே...