தமுஎகச கிளை கூட்டம்

தேவகோட்டை, அக்.18:  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க தேவகோட்டை கிளைக் கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் போஸ் முன்னிலை வகித்தார். செயலாளர் அன்பரசன் வரவேற்றார். தமுஎகச முன்னோடி ப.ரெத்தினம் பொன்னிதாசன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர். கவிஞர் தமிழ்க்கனல் கிராமியப்பாடல்கள் பாடினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயமுருகன், புகைப்படக்கலைஞர் முத்து, மாவட்டச்செயலாளர் சங்கர சுப்பிரமணியன், மாவட்டத்தலைவர் ஜீவசிந்தன் பேசினர். பொருளாளர் சக்கரவர்த்தி மரியஜெயபால் நன்றி கூறினார். புரட்சித்தம்பி, கேசவன் மற்றும் ரவிக்குமார் கூட்ட ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Tags : TMU Branch Meeting ,
× RELATED கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை வாகனம்