×

துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தில் பயணியிடம் ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கம் சிக்கியது

அவனியாபுரம், அக். 18:துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தில் பயணியிடமிருந்து ரூ.24 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மதுரை விமான நிலையத்தில் துபாயிலிருந்து நேற்றிரவு மதுரை வந்த விமானத்தில் தங்கம் கடத்துவதாக தகவல் வந்தது. இதையடுத்து மத்திய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர்பாட்சா மகன் சர்புதின் (39) என்பவர் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து கொண்டார். அவரை பின் தொடர்ந்த அதிகாரிகள் அவரை வெளியே அனுப்பினர்.

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவர் அங்கு காத்திருந்த திருச்சியை சேர்ந்த அப்துல்காதர் மற்றும் அவரது நண்பர் அல்லாபிச்சை இருவரும் சர்புதீனிடமிருந்து துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 692 கிராம் எடையுள்ள ரூ.24 லட்சம் கடத்தல் தங்கத்தை பெற்றனர். அப்போது சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் மடக்கினர்.பின்னர் மூவரையும் பிடித்து கடத்தல் தங்கம் குறித்து சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Tags : passenger ,flight ,Dubai ,Madurai ,
× RELATED ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த...