×

வெள்ளியணை ரயில்வே பாலத்தில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி வாகன விபத்து

கரூர்: வெள்ளியணை ரயில்வே பாலத்தில் விபத்து தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூரில் இருந்து வெள்ளியணை செல்லும் பிரதான சாலையில், வெள்ளியணைக்கு முன் திண்டுக்கல்- கரூர் அகல ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் ரயில்கள் செல்வதற்காக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் கீழ்புறம் தூண்கள் அமைக்கப்பட்டு இருவழிப்பாதை ஏற்படுத்தப்பட்டு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. புதிதாக வரும் வாகன ஓட்டிகளும், இரவுநேரங்களில் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் இந்த இடத்தில் தடுமாற்றம் அடைகின்றனர்.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்தில் அவ்வப்போது வாகனங்கள் சிக்கி கொள்கின்றன. விபத்தை தடுக்கும் வகையில் மேம்பாலத்திற்கு 100 அடி தூரத்தில் இரவுநேரத்தில் ஒளிரும் ஒளிபிரதிபலிப்பான்களையும், ரிப்ளக்டர் போர்டுகளையும் வைக்க வேண்டும். வேகத்தடை அமைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு விபத்துக்களை தடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : vehicle accident ,Silver Railway Bridge ,
× RELATED வாகன விபத்தில் வாலிபர் பலி