×

வீட்டில் புகுந்து 4.5 பவுன் நகை திருட்டு

கோவை, அக்.18:பொள்ளாச்சி ஜமீன்ஊத்துக்குளியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் தனபால் (29), தச்சு தொழிலாளி. இவர், நேற்று முன் தினம் மதியம் 2 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். மீண்டும் மாலையில் திரும்பியபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த இருந்த 4.5 பவுன் செயினை காணவில்லை. வீட்டை பூட்டிவிட்டு, அதன் சாவியை நிலைப்படியின் மேல்வைத்து சென்றதை பார்த்த யாரோ, கதவை திறந்து நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து தனபால், பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : home ,
× RELATED வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள்...