×

செல்போன் திருடியவர் கைது


ஈரோடு, அக்.18: புஞ்சைபுளியம்பட்டி ஜெ.ஜெ.நகரை சோந்தவர் ஓவன். இவரது மகன் குமார் (29). இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் கவுந்தப்பாடி நால்ரோடு பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக நின்றிருந்தார். அப்போது, கைப்பையில் செல்போன் வைத்துவிட்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது அருகில் நின்றிருந்த நபர் நைசாக கைப்பையில் இருந்த செல்போனை திருடிக்கொண்டு தப்பியோட முயன்றார். இதையடுத்து, நண்பர்களின் உதவியோடு அந்த நபரை பிடித்து கவுந்தப்பாடி போலீசில் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர் கோபி அரசூர், குள்ளம்பாளையத்தை சேர்ந்த முருகேசன்(46) என தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் முருகேசனை கைது செய்தனர்.

Tags :
× RELATED செல்போன் திருடிய 2 பேர் கைது