×

பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் பணியிடம் நிரப்ப கோரி ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி, அக்.17: பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் அதன் வட்டச்செயலாளர் பாண்டியன் தலைமையில் அலுவலர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்டத்தில் காலியாக உள்ள துணை தாசில்தார் பணியிடங்களை நிரப்ப கோரி உள்ளிருப்பு போராட்டம், கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம், ஆர்ப்பாட்டம் என தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலர்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று மாலை பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags : Demonstration ,Dasildar ,office ,Ponnamaravathi Taluk ,
× RELATED எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்