×

வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை குறைவு

மதுரை, அக். 17: மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில், வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. நேற்று மார்க்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் விலையும் குறைவாக இருந்தது.நேற்றைய விலையானது (ஒரு கிலோ, விலை ரூபாயில்) கத்திரிக்காய் 20, தக்காளி 20, பச்சைமிளகாய் 40, பல்லாரி 40, சின்னவெங்காயம் 35, உருளைக்கிழங்கு 30, சேனைக்கிழங்கு 20, கருணைக்கிழங்கு 30, சேம்பு 40, பீன்ஸ் 30, கேரட் 20, காளிப்பிளவர் ஒரு பூ 15, நூக்கல் 10, டர்னிப் 15, பட்டர் 120, சோயாபீன்ஸ் 90, பச்சை பட்டாணி 90, அவரை 25, பீட்ரூட் 15, முள்ளங்கி 15, வெண்டைக்காய் 15, பூசணிக்காய் 10, முருங்கைக்காய் (கிலோ) 30, முட்டைக்கோஸ் 15, பச்சைமொச்சை 35, சவ்சவ் 10, கருவேப்பிலை 20, மல்லி 25, புதினா 20, இஞ்சி 160, புதிய இஞ்சி 60, கோவைக்காய் 25, கொய்யாப்பழம் (ெவள்ளை) 50, கொய்யா (சிகப்பு) 90. பட்டர் பீன்ஸ், சோயா, பச்சை பட்டாணி ஆகியவற்றின் விலை பல மாதங்களாக அதிகமாகவே உள்ளது. அதே நேரம் நாட்டு காய்கறிகளின் விலை தற்போது குறைந்துள்ளது. காய்கறி வியாபாரிகள் சங்கத்தலைவர் முருகன் கூறுகையில், ‘‘தற்போது பண்டிகை காலம் முடிந்துள்ளது. புரட்டாசி மாதம் என்பதால் முகூர்த்த நாள்கள் இல்லை. இதோடு காய்கறிகளின் வரத்து அதிகம் உள்ளதால் விலை குறைந்துள்ளது’’ என்றார்.

Tags :
× RELATED அதிக பாரத்தால் விபத்து ஏற்படும் அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்