×

கிஸான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம்

காஞ்சிபுரம், அக்.17: கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை.பிரதமரின் கிஸான் சம்மான் நிதி எனப்படும் கவுரவ நிதி திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகள் சேர்க்கப்பட்டு தற்போது பயன் பெறுகின்றனர்.ஏற்கனவே பதிவு செய்துள்ள தகுதியுள்ள விவசாயிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை ₹2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ₹6 ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.இந்த திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகள், சேர்க்கப்படாமல் விடுபட்டு இருந்தால் அவர்கள் தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சிட்டா ஆவணங்களுடன் அருகில் உள்ள பொது இ-சேவை மையத்துக்கு சென்று www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

கணினி விவரம் தெரிந்த விவசாயிகள் தாங்களாகவே இணையதளத்தில் பார்மர்ஸ் கார்னர் என்ற ஆப்சனில் சென்று “நியூ பார்மர் ரிஜிஸ்ட்ரேசன்” எனும் ஆப்சன் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். திருத்தம் செய்யலாம்.இத்திட்டத்தில் ஏற்கனவே இணைந்த விவசாயிகளில், முதல் 2 தவணை நிதி பெற்றவர்கள் சிலருக்கு 3வது தவணை வரவு வைக்காமல் இருந்தால், தங்களது பெயரை ஆதார் அட்டையில் உள்ளபடி மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் “பார்மர்ஸ் கார்னர்” என்ற ஆப்சனில் சென்று “எடிட் ஆதார் டீடைல்ஸ்” எனும் ஆப்சன் மூலம் திருத்தம் செய்து கொள்ளலாம்.இதை தாங்கள் அல்லது பொது இ-சேவை மையத்தில் சரிபார்த்து திருத்தம் செய்து கொள்ளலாம். ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் விவரங்கள் சரியாக இருந்தால் மட்டுமே 3வது தவணை நிதி விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Kisan Samman ,
× RELATED தவணைத்தொகை கிடைக்காத விவசாயிகள்...