×

பூத்து குலுங்கும் செண்டு மல்லி வத்தலக்குண்டுவில் இடித்த கழிப்பறை குவியல் குப்பை மேடானது

வத்தலக்குண்டு, அக். 16: வத்தலக்குண்டுவில் பள்ளி முன்பு இடிக்கப்பட்ட கழிப்பறை மண், கல் அகற்றப்படாததால் குப்பை மேடாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வத்தலக்குண்டு- மதுரை சாலையில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளி முன்பு இருபுறமும் பயன்படாத கழிப்பறைகள் இருந்தன. அதில் பல சமூகவிரோத செயல்கள் நடந்தன. பள்ளி நிர்வாகத்தினர், சமூகஆர்வலர்கள் கழிப்பறைகளை அகற்ற கோரி கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து தினகரனில் படத்துடன் செய்தியும் வெளியானது. இதன் எதிரொலியாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினர் அந்த இரு கழிப்பறைகளையும் இடித்து அகற்றினர். ஆனால் இடித்த கல், மண் குவியலை அகற்றவில்லை. இதனால் தற்போது அதன் மீது குப்பைகள் கொட்டப்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதில் கேள்வி என்னவென்றால் கல், மண் குவியலை அகற்றுவது கழிப்பறைகளை இடிக்க சொன்னா பள்ளியா அல்லது இடித்த நெடுஞ்சாலைத்துறையா அல்லது சுகாதாரத்தை பேணும் பேரூராட்சியா என்பது தெரியவில்லை. எப்படியோ கல் மண் குவியல் அகற்றப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து சமூகஆர்வலர் பாக்யராஜ் கூறுகையில், ‘இந்த கதை பேயை விரட்டி விட்டு பிசாசை குடி வைத்தது போல் உள்ளது. கழிப்பறையாவது விளம்பரம் எழுத உதவியதுடன் யாருக்கும் இடையூறு இல்லாமல் ஒதுங்கி இருந்தது. ஆனால் அதை இடித்த கல், மண் குவியல் தற்போது அவ்வழியே செல்லும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. எனவே மக்கள் நலன் கருதி உடனடி நடவடிக்கை தேவை’ என்றார்.


Tags : Mutti Vattalakundu ,
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்