×

3 பேர் படுகாயம் விவசாயிகளுக்கு செலவில்லா இயற்கை பண்ணையம் அமைத்தல் பயிற்சி

பொன்னமராவதி, அக்.16: பொன்னமராவதி, வேளாண்மை விரிவாக்க மையத்தில் செலவில்லா இயற்கை பண்ணையம் அமைத்தல் பற்றிய விவசாயிகள் பயிற்சி நடந்தது. பொன்னமராவதி வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை திட்டத்தின் விவசாயிகளுக்கு செலவில்லா இயற்கை பண்ணையம் குறித்த பயிற்சி பொன்னமராவதி வட்டார வேளண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது. பயிற்சிக்கு பொன்னமராவதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர். சிவராணி தலைமையில் வகித்து நடப்பாண்டு வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானியங்கள், பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டம், நுண்ணீர் பாசனத் திட்டங்கள், நீடித்த நிலையான மானாவாரி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து வேளாண்மை இயக்கம், குடுமியான்மலை துணை இயக்குநா பெரியசாமி, கலந்துகொண்டு பாரம்பரிய ரகங்களின் முக்கியத்துவம், செலவில்லா முறையில் இயற்கை பண்ணையம் அமைத்தலின் முக்கியத்துவம், அதன் பயன்கள் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.

அதனை தொடர்ந்து வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் உதவி பேராசியர் சண்முகபாக்கியம் பேசினார். முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரவிராஜன், வரவேற்றார். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளா நிதி நன்றி கூறினார்.

Tags : Farming Practices for Farmers ,
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ