×

சிகிச்சைக்காக வெளியூருக்கு படையெடுக்கும் பொதுமக்கள் டெங்கு பீதியில் இளையான்குடி மக்கள் மருத்துவமுகாம் நடைபெற வலியுறுத்தல்

இளையான்குடி, அக்.15:  இளையான்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக பரவும் காய்ச்சலால், டெங்கு பீதியில் மக்கள் உள்ளனர். இளையான்குடி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளும், 18 வார்டுகளாக பேரூராட்சி நிர்வாகமும் செயல்படுகிறது. பேரூராட்சி நகர் பகுதியில் மட்டும் சுமார் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தேங்கும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் தினமும் அகற்றி வந்தாலும், கழிவுநீர் அடைப்பு மற்றும் கொசு மருந்து தெளிப்பது உள்ளிட்ட பணிகள் மந்தநிலையில்தான் உள்ளன. பல வாய்க்கால்களின் சிலாப்புகள் பெயர்ந்தும், குப்பைகள் தேங்கியும் உள்ளதால் கொசு உற்பத்தி தாராளமாக உள்ளது. அதனால் டெங்கு உள்ளிட்ட மர்மகாய்ச்சல்  இளையான்குடியில் வேகமாக பரவிவருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். உயிர் பயத்தில் சிகிச்சைக்காக மதுரை, பரமக்குடி அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து பல பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் கடந்த ஒரு ஆண்டுகளாக, இந்த பேரூராட்சியில் சுகாதார ஆய்வாளர் நியமிக்கப்படாமல், பல முறை கலெக்டர் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததின்பேரில், நீண்ட நாட்களுக்குப் பின் கடந்த வாரம் சுகாதார ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் ஒரு ஆண்டு இடைவெளியில்  பல பணிகள் உள்பட, சுகாதாரமும் இளையான்குடியில் முடங்கிப்போயுள்ளது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 அதனால் இளையான்குடியில் டெங்குவை கண்டறியும் எலிசா சோதனை உள்பட, சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் நகர சிறுபான்மை பிரிவுத் தலைவர் அம்பலம் ராவுத்தர் நெய்னார் கூறியதாவது, கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக கால்வாய்கள் உள்ளது. மதுரையில் சிலபேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால் இந்த பகுதியில் டெங்கு உள்ளிட்ட மர்மகாய்ச்சல் வேகமாக பரவிவருகிறது என்றார்.

Tags : outpost ,public ,Immigrant People's Medical Center ,
× RELATED கொள்ளிடம் அருகே மாதானம் புறக்காவல்...