×

பெண்ணிடம் 7 பவுன் பறிப்பு

ஒட்டன்சத்திரம், அக். 15: ஒட்டன்சத்திரம் அண்ணாநகரை சேர்ந்த குணா மனைவி கலா (45). சம்பவத்தன்று இவர் மருத்துவமனையில் உள்ள தனது தந்தையை பார்த்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது அவ்வழியே டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் திடீரென கலாவின் கழுத்தில் இருந்த சுமார் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரில் ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்