×

இன்று மின்தடை

மானாமதுரை, அக்.10: மானாமதுரை வட்டாரப்பகுதிகளில் மின்பராமரிப்பு பணி நடக்க இருப்பதால் இன்று மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மானாமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மானாமதுரை துணைமின்நிலையத்தில் இன்று மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், மின்நிலையத்திற்கு உட்பட்ட மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, முனைவென்றி, கச்சாத்தநல்லூர், நல்லாண்டிபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கொரோனா ஊடரங்கு காலத்தில் நிர்வாண படம்...