×

மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரயில்வே முன்பதிவு மையம் எம்பியிடம் வலியுறுத்தல்

மதுரை, அக். 10: மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரயில்வே முன்பதிவு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்பியிடம் வக்கீல்கள் வலியுறுத்தினர். மதுரை எம்பி வெங்கடேசன், நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட போது மாவட்ட நீதிமன்றத்தில் மதுரை வழக்கறிஞர் சங்கத்தில் தனக்கு ஆதரவு கோரினார். தற்போது எம்பியாகவுள்ள அவர், மதுரை வழக்கறிஞர் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் நன்றி தெரிவித்து வக்கீல்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.இந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகிக்க, செயலாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். அப்போது எம்பியான பிறகு தனது பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து வெங்கடேசன் பேசினார். அப்போது வக்கீல்கள் தங்களுக்கு கூடுதல் சேம்பர் கட்டிடம் கட்டித்தரவும், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரயில்வே முன்பதிவு மையத்தை அமைத்து தரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதை நிறைவேற்றித்தர உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்பி உறுதி அளித்தார். இதில் பொருளாளர் கணேசன், பார் கவுன்சில் உறுப்பினர் அசோக், வக்கீல்கள் கருணாநிதி, ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Railway Reservation Center MP ,
× RELATED கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருவருக்கு அருவாள் வெட்டு