×

வள்ளலார் பிறந்தநாள் விழிப்புணர்வு பிரசாரம்

மதுரை, அக். 10: மதுரை உத்தங்குடியில் உள்ள கருணை சபை சாலை அறக்கட்டளையின் சார்பில் அருட்பிரகாச வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி விலங்கின உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விலங்குகளின் முகமூடிகளை அணிந்து கொண்டு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். கருணை சபை நிர்வாகி ராமலட்சுமி, ‘ஜீவர்கள் தயவு’ என்ற புதிய அமைப்பை துவங்கி வைத்தார். இந்த அமைப்பின் மூலம் நம்மை போல் பிற உயிர்களையும் கருதவேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதில் வக்கீல் கண்ணன், சகாதேவராஜ், சசாங்கன், செங்கிஸ்கான், சரவணகுமார், இளங்கோ மற்றும் சிறுவர்- சிறுமியர் பலர் கலந்து கொண்டனர். சுப்பாராஜ் நன்றி கூறினார்.

Tags : Vallalar Birthday ,
× RELATED கொரோனா வைரஸ் விழிப்புணர்வு...