×

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பள்ளி மாணவன் பலி

பழநி, அக். 10: பழநி அருகே கீரனூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பள்ளி மாணவன் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.பழநி அருகே கீரனூர், சாம்புராயன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி திலகவதி. இவர்களது மகன் முகேஷ் (16). இங்குள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று தனது தாயுடன் முகேஷ் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இருவர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.அங்கு மாணவன் முகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாய் திலகவதி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கீரனூர் போலீசார் நிற்காமல் சென்ற வாகனம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : School student ,collision ,
× RELATED வாகனம் மோதி வாலிபர் பலி