×

காலாவதியான பொருட்கள் பறிமுதல்

ஊட்டி, அக். 10: ஊட்டியில் காலாவதியான பேக்கிரி பொருட்கள் மற்றும் தேயிலை தூள் ஆகியவைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  ஊட்டி கமர்சியல் சாலையில் உள்ள பேக்கிரிகள் மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் சில பேக்கிரிகளில் தேதி குறிப்பிடாமல், உணவு பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், சில கடைகளில் கலாவதியான தேதி அழிக்கப்பட்டு தேயிலை தூள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரூ.6 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் அழித்தனர்.

 இதையடுத்து நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான மக்கள் பல்வேறு உணவு பொருட்கள் மற்றும் இனிப்புகள் போன்ற பொருட்களை வாங்குவார்கள். இதனை பயன்படுத்தி சில வியாபாரிகள் தரமற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடும். எனவே காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என ஏற்கனவே அனைத்து வியாபாரிகளுக்கும் தெரிவித்துள்ளோம். இந்நிலையில், ஆய்வில் காலாவதியான பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்து அழித்துள்ளோம்.  மேலும், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால், பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட கடைகளில் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும், நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறினார்.

Tags :
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ