×

டேன்டீ தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்

பந்தலூர், அக். 10:டேன்டீ தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய ேவண்டும் என யூனியன் பொதுச்செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.  பந்தலூர் இண்டகிரல் பிளான்டேசன் ஒர்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் ஜெபமாலை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்காக தமிழக அரசு தேயிலைத்தோட்டம் கழகம் (டேன்டீ) ஆரம்பித்தது. இதில் பணிபுரிபவர்கள் பணி நிறைவு பெற்றவுடன் குடியிருப்பை காலி செய்துவிட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது, டேன்டீ தேயிலைத்தோட்டத்தையே நம்பி பணிசெய்து வருகின்ற மக்களை அடிக்கடி பணி நிறுத்தம் செய்து வருவதால் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே அவர்களை நிரந்தரமாக பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Dandee ,
× RELATED தனியார் மயமாக்க எதிர்ப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்