கொப்பனாபட்டி-ஆலவயல் இடையே குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி

பொன்னமராவதி,அக்.10: பொன்னமரவாதி அருகே கொப்பனாபட்டி-ஆலவயல் குண்டும் குழியுமான சாலையினை சீர் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கொப்பனாபட்டியில் இருந்து ஆலவயல் வழியாக பாலகுறிச்சிக்கு செல்லும் நெடுஞ்சாலைத்துறை சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக கிடக்கின்றது.

குறிப்பாக ஆலவயல் ஊரின் மையப்பகுதியில் செல்லும் இந்த சாலையில் பல இடங்களில் பெரிய குண்டு குழிகள் உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக திருச்சி, ஈரோடு, பாலகுறிச்சி, சடையம்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் மற்ற வாகனங்கள் மற்றும் சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். எனவே இந்த சாலைகளில் உள்ள குழிகளை சீர் செய்து நல்ல போக்குவரத்துக்கு சென்று வரும் விதமாக நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Kopanapatti-Alavayal ,
× RELATED சாலை விபத்துகளினால் ஏற்படும்...