×

70 லிட்டர் சாராயம் பறிமுதல்

கடலூர், அக். 10: கடலூர் பகுதியில் வெவ்வேறு வழக்கில் 70 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பால்சுதர் மற்றும் போலீசார், கடலூர் பேருந்து நிலையம் அருகில் இம்பீரியல் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாகச் சென்ற பைக்கை சோதனையிட மறித்தபோது அதில் இருந்த ஒருவர் தப்பியோடினார். இதையடுத்து பைக்கை சோதனையிட்டு அதில் 8 மூட்டைகளில் வைத்திருந்த 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து புதுச்சேரி மாநிலம் பாகூரைச் சேர்ந்த கண்ணையன் மகன் ஐயப்பன் (32) என்பவரை கைது செய்தனர். தப்பியோடிய பெரியகாரைக்காட்டை சேர்ந்த ராமமூர்த்தியை தேடி வருகின்றனர்.மற்றொருவர் கைது: இதேபோல், கிழக்கு ராமாபுரத்தில் சோதனை நடத்திய போலீசார், அங்கு ஒரு வீட்டின் அருகே சாராயம் பதுக்கி வைத்திருந்ததாக அய்யப்பன் மகன் சங்கர் (35) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Tags :
× RELATED கண்ணமங்கலம் அருகே ஆச்சரியம்...