×

பெண் பலாத்கார வழக்கில் ஒருவருக்கு 10 ஆண்டு சிறை

சிவகங்கை, செப். 20: திருப்பத்தூர் அருகே நடுவிக்கோட்டையை சேர்ந்த கருப்பையா மகன் பழனிச்சாமி. இவர் கடந்த 2013ம் ஆண்டு இதே ஊரைச்சேர்ந்த 27 வயது பெண்ணை பலாத்காரம் செய்தார். இது குறித்து பெண் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து பழளிச்சாமியை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செம்மல் கைது செய்யப்பட்ட பழனிச்சாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags :
× RELATED முகக் கவசம் அணியாமல் வெளியில்...