சாத்தூர் முடித்தலை ஆற்றில் டூவீலரில் மணல் திருடியவர் கைது மற்றொருவர் தலைமறைவு

சாத்தூர், செப். 20: சாத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் மணல் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றோருவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். சாத்தூர் அருகே முடித்தலை ஆற்று பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக இருக்கன்குடி காவல்நிலையத்தி–்ற்கு வந்த தகவலின் படி எஸ்.ஐ சிவராஜபாண்டியன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சாக்குமூட்டையில் மணல் கடத்தி வந்த முடித்தலையை சேர்ந்த கடற்கரைராஜ் மகன் குணசேகரன்(25) என்பவரை கைது செய்த போலீசார், அவரை விசாரணை செய்ததில் ஆற்றில் சாக்கு மூட்டையில் முத்து என்பவர் மணல் அள்ளிக்கொண்டிருப்பதாககூறியுள்ளார். அங்கு சென்று போலீசார் முத்துவை பிடிக்க முயன்றனர். ஆனால் போலீசார்களை பார்த்தவுடன் முத்து தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

Tags :
× RELATED அறந்தாங்கி அருகே சரக்கு வேனில் மணல் கடத்தியவர் கைது