×

கூடலூர்-கேரளா சாலையில் 40 நாட்களுக்கு பிறகு இலகுரக போக்குவரத்து துவங்கியது

கூடலூர், செப். 20:40 நாட்களுக்கு பின் கூடலூர்-கேரளா சலையில் இலகு ரக வாகன போக்குவரத்து நேற்று துவங்கியது. மேலும் கனரக வாகன செல்ல தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாத துவகத்தில் கனமழை பெய்தததால் கூடலூரில் இருந்து கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை இணைக்கும் கூடலூர் நிலம்பூர் சாலையில் கீழ்நாடு காணியை அடுத்த மலைப்பாதையில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதை சீரமைக்க கேரளா அரசு 20 நாட்களுக்கு பின்னரே பணியை துவங்கி தற்போது வரை அப்பணி நடந்து வருகிறது. இதில் தேன்பாறைப் பகுதியில் மொத்தமாக சரிந்து கிடந்த மிகப்பெரிய அளவிலான பாறைகளை உடைத்து அகற்றும் பணிகள் நடைபெற்று அப்பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து துவங்கும் வகையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து உள்ளது. இந்த சாலையில் 40 நாட்களுக்கு பின்னர் நேற்று காலை முதல் கார் உள்ளிட்ட இலகு ரக வாகன போக்குவரத்து இயங்கிவருகிறது.  

மீதம் உள்ள பாறைகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சேதமடைந்த சாலையை கேரளா மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்ேபாது அவர்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் இரண்டு இடங்களில் சாலை முழுவதம் சேதம் அடைந்துள்ளதால் புதிதாக தரை பாலம் கட்டப்பட்டு பின்னரே பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் போக்குவரத்து துவங்கும் என தெரிவித்தனர். இந்தசாலையில் தற்போது போக்குவரத்து துவங்கபட்டுள்ளதால் நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக பூட்டி கிடைந்த ஓட்டல் உள்ளிட்ட வியாபார நிறுவனங்கள் திறந்து செயல்பட துவங்கியுள்ளன. மேலும், கனரக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சாலையில் பிளவு ஏற்பட்டு உள்ள பகுதி வரை,  இரண்டு புறம் வரை அரசு பேருந்துகளை இயக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் விரைவில் பேருந்து போக்குவரத்து துவங்கும் என்றும் எதிர்பார்க்படுகிறது.

Tags : road ,Cuddalore ,Kerala ,
× RELATED சாலை விதிமீறலுக்கு ஆன்லைனில் அபராதம்...