×

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல்

சூலூர், செப். 20 : சூலூர் அருகே சிந்தாமணிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம்(65). இவருக்கு  அதேபகுதியில் 2 திருமண மண்டபம் உள்ளது. திருமண மண்டப வளாகத்தில் குடிநீர் சுத்தரிப்பு செய்யும் கம்பெனியும் மகாலிங்கம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வேலுச்சாமி தலைமையில் அதிகாரிகள் நேற்று முன்தினம் சிந்தாமணிப்புதூரில் உள்ள மகாலிங்கத்திற்கு சொந்மான குடிநீர் சுத்திகரிப்பு கம்பெனியில் ஆய்வு மேற்கொள்ள சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாலிங்கம் மற்றும் அவரது மகன்  அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், வேலுச்சாமி அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மகாலிங்கம் மற்றும் அவரது மகனை தேடி வருகின்றனர்.

Tags : Murder ,food security officer ,
× RELATED டிரைவர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது