×

கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கரூர், செப். 20: கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் தொழில்முனைவோர் அமைப்பு (என்ட்ரிபிரினர் செல்) கல்லூரி வளாகத்தில் தொழிலமுனைவோருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
டாக்டர் பி.ஷியாம்சுந்தர் துறைத்தலைவர், மென்டர், ஐஇடிசி, மென்டர் இ செல் அண்டு டிடிசி கன்வீனர், இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து இந்த நிகழ்வின் மூலம் தொழில்முனைவோருக்கு கிடைக்கக்கூடிய பல்வேறு நிதி உதவிகளை நிதி நிறுவனங்கள் மூலமாக பெற்று மேம்படுத்திக்கொள்ளுமாறு கூறினார்.டி.ரமேஷ், பொதுமேலாளர், துணை இயக்குநர், மாவட்ட கைத்தொழில் மையம், கரூர், ஜி.கிரிஷன் , வி.எம்.மோகன் ஸ்வாம் சிஸ்டம்ஸ், மாணவர்களிடம் உரையாற்றினர்.அவர் பொறியியல் மாணவர்களுக்கு வணிகத்தை தொடங்க டிஐசியிலிருந்து கிடைக்கும் பல்வேறு திட்டங்களை பற்றியும், மேலும் வெற்றிகரமான தொழில் முனைவோராக மாறுவதற்கான நன்மைகள் மற்றும் உத்திகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

ஜி.கிரிஷன், மாவட்ட தொழில்துறை மையத்தின் உதவி பொறியாளர், எம்.எஸ்.எம்.இ பற்றிய கருத்து மற்றும் அவற்றின் வகைப்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினார். தொழில்முனைவோர் மற்றும் சுயவேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு குறித்தும் விளக்கினார்.மேலும் அவர் பிஎம்இஜிபி மற்றும் நீட்ஸ் திட்டங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து உரையாற்றினார்.வி.எம்.மோகன், நிர்வாக இயக்குநர் ஸ்வாம் சிஸ்டம்ஸ் வணிகத்தில் தொழில் நெறிமுறைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். மேலும் மாணவர்கள் டிஐசியின் கீழ் கிடைக்கும் மாநில மற்றும் மத்திய அரசு திட்டங்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.பல்வேறு பொறியியல் பிரிவுகளை சார்ந்த 120 மாணவர்கள் மற்றும் 16க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கே.ராம்ப்ரதாப், உதவி பேராசிரியர், இ செல், ஐஇடிசி ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.Tags : Entrepreneurs ,Karur M Kumaraswamy Engineering College ,
× RELATED தொழிலாளர் தட்டுப்பாடு பெரிய அளவில்...