×

உதவி இயக்குனர் தகவல் பழுதடைந்த கட்டிடங்களில் இயங்கி வந்த வாக்குச்சாவடிகள் மாறுதல் குறித்து தாலுகா அலுவலகத்தில் தகவல் வெளியீடு

திருவாரூர், செப். 20: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் நன்னிலம் ஆகிய 4 எம்எல்ஏ தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆனந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் ஆனந்த் பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி நகரம்மற்றும் கிராம பகுதிகளில் 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளாக பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் திருவாரூர் மாவட்டத்தில் தற்போது நான்கு தொகுதிகளிலும் மொத்தம் 1168 வாக்குச்சாவடிகள் இருந்துவரும் நிலையில் 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் என மறுசீரமைப்புக்கு உரிய வாக்குச்சாவடிகள் எதுவும் இதுவரையில் இல்லை.இருப்பினும் ஏற்கனவே செயல்பட்டு வந்த வாக்குச்சாவடி மைய கட்டிடங்கள் பழுதானால் அதனை அருகில் உள்ள புதிய கட்டிடத்தில் மாறுதல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அவ்வாறு வாக்குச்சாவடி மையம் பழைய கட்டடத்தில் இருந்து புதிய கட்டிடத்திற்கு மாறுதல் குறித்த விவரங்கள் அடங்கிய வாக்குச்சாவடிகளின் பட்டியல் சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலகம் மற்றும் தாலுக்கா அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளன என்பதை அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.  இவ்வாறு கலெக்டர் ஆனந்த் பேசினார்.

Tags : Taluk Office ,buildings ,
× RELATED சென்னையில் 34 வார்டுகளில் தான் கொரோனா...