×

ரயில்வே மஸ்தூர் யூனியன் கண்டன ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம், செப். 20: விருத்தாசலம் ரயில் நிலையத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் விருத்தாசலம் கிளை செயலாளர் கணேஷ்குமார் தலைமை தாங்கினார். கிளை தலைவர் செல்வம், பொருளாளர் வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் உதவி பொது செயலாளர் சென்னை ஈஸ்வரலால், திருச்சி கோட்ட செயலாளர் வீரசேகரன், திருச்சி கோட்ட தலைவர் மணிவண்ணன், செயல் தலைவர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

உற்பத்தி தொழிற்சாலைகளை கார்ப்பரேட் ஆக்கும் முயற்சியை கைவிட வேண்டும். ரயில்வே துறையை கார்ப்பரேட், தனியார், பன்னாட்டு, நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பபதை நிறுத்த வேண்டும். ஐஆர்சிடிசி போர்வையில் லாபகரமாக இயங்கும் இரண்டு தேஜஸ் ரயில்
களையும், ஐந்து எக்ஸ்பிரஸ் விரைவு ரயில்களையும், கார்ப்பரேட்டுகளுக்கு விற்பதை நிறுத்த வேண்டும். என்பிஎஸ் பணத்தை பாதுகாத்து, கியாரண்டியுடன் கூடிய பென்சன் வழங்கிட வேண்டும். ரிஸ்க் மற்றும் ஹார்ட்ஷிப் அலவன்சை அனைத்து சேப்டி பிரிவு தொழிலாளர்களுக்கும் வழங்கிட வேண்டும். ரயில்வே அச்சகங்களை மூடுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில்
வலியுறுத்தப்பட்டது.

Tags : protest ,Railway Mastur Union ,
× RELATED அனுஷ்கா எதிர்ப்பை மீறி இணையதளத்தில் வெளியாகும் நிசப்தம்