×

ஜான்ஸ்கொயரில் போக்குவரத்து நெரிசல்

கோத்தகிரி, செப்.19: கோத்தகிரி அருகே உள்ள ஜான்ஸ்கொயர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  கோத்தகிரி நகரின் முக்கிய பகுதியாக ஜான்ஸ்கொயர் உள்ளது. இப்பகுதியில், ஏராளமான வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் உள்ளன. இந்த பகுதியில் சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பகுதி, இரு பள்ளிகளுக்கு  செல்லும் முக்கிய சாலை என்பதால் பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோத்தகிரி காவல்துறையினர் இந்த சாலையில் இருபுறமும் நிறுத்தப்படும் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து...