×

இலவச நாட்டுகோழி பெற விண்ணப்பிக்கலாம்

ஈரோடு, செப். 19:  வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற பெண்களுக்கு இலவச அசில் இன  நாட்டு கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டம் 2018-19ம் ஆண்டில்  வழங்கப்படுகிறது. அதன்படி, 2,800 கிராமப்புற பெண்களுக்கு கோழி  வழங்கியதன் மூலம் அவர்கள் வருமானம் ஈட்டி வருகின்றனர். தற்போது 2019-20ம்  ஆண்டிற்கான திட்டம் பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.  நடப்பாண்டில் ஈரோடு மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலமாக ஊராட்சி  ஒன்றியங்கள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வறுமைக்கோட்டிற்குகீழ் வாழும்  16,650 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கோழிவளர்ப்பு  தொடர்பாக ஒருநாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.  தொடர்ந்து அவர்களுக்கு தலா  25 அசில் இன நாட்டுகோழிகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட  ஏழைகளின் பங்கு அடையாள அட்டை எண் வைத்திருக்கும் பெண்கள் மட்டுமே தேர்வு  செய்யப்படுவார்கள்.   இதற்கு தகுதியான ஆர்வமுள்ள மகளிர்  அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை,  உதவி மருத்துவரிடம் ஒருவார காலத்திற்குள்  விண்ணப்பிக்க கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கேட்டுக்  கொள்ளப்பட்டுள்ளது.

Tags :
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ