காவேரிப்பட்டணத்தில் பெரியார் பிறந்தநாள் விழா

காவேரிப்பட்டணம், செப்.19: காவேரிப்பட்டணத்தில் அனைத்து கட்சி சார்பில், பெரியார் பிறந்தநாள் விழாவையொட்டி ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மண்டல திராவிடர் கழக செயலாளர் திராவிடமணி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் கதிரவன், மாவட்ட தலைவர் மதிமணியன், மாவட்ட செயலாளர் மாணிக்கம், ஒன்றிய அமைப்பாளர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், பகுத்தறிவு கழக துணைத் தலைவர் மூர்த்தி, மாவட்ட  துணைத்தலைவர் அறிவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் பட ஊர்வலத்தை திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் திருப்பதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், நகர செயலாளர் பாபு, ராஜன், முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி, சாபுதீன், குமார், மதிமுக இளங்கோ, காங்கிரஸ் ராமன், விசிக சசிகுமார், தேமுதிக கோவிந்தராஜ், ஆனந்தகுமார், மாயாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் ராஜேந்திரன் மார்க்சிஸ்ட் கட்சி மாதன், சுரேஷ் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சீனிவாசன் நன்றி கூறினார்.Tags : Periyar ,Birthday Party ,
× RELATED அப்துல் கலாம் பிறந்தநாள் விழா