×

குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

நாமக்கல், செப்.17:   நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஆசியாமரியம் தலைமையில் நேற்று நடந்தது. இதில், முதியோர் உதவித்தொகை, விதவையர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடனுதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பொதுமக்களிடம் இருந்து 435 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி, அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ₹4,600 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி கை கடிகாரம் மற்றும் மடக்கு ஊன்றுகோல், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ₹2,840 மதிப்பிலான காதொலி கருவி, 63 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார். இதில் டிஆர்ஓ ரவிச்சந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை கலெக்டர் பாலசுப்பிரமணியன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Disabled Persons ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி