×

ஓசோன் தினத்தையொட்டி அரசு கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், வினாடி வினா போட்டி

அரியலூர், செப். 17: ஓசோன் தினத்தையொட்டி அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம், வினாடி வினா போட்டி நடந்தது.
உலகம் முழுவதும் ஓசோன் மண்டலத்தை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஓசோன் தினமான நேற்று அரசு கலைக்கல்லூரியில் உள்ள சுற்றுச்சூழல்துறை சார்பில் மாணவர்களுக்கு ஓவியம், வினாடி- வினா, பேச்சு போட்டிகள் நடந்தது. முன்னதாக சுற்றுச்சூழல் மாணவர்கள் எவ்வாறு சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பங்கெடுப்பது குறித்து கல்லூரி முதல்வர், சுற்றுச்சூழல் தலைவர் அருள் விளக்கினர்.
இதையடுத்து நடந்த போட்டிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் பேராசிரியர்கள் அனிதா, பாலாஜி, அறிவொளி செய்திருந்தனர். இதேபோல் இடைத்தான்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மனித சங்கிலியாக மாணவர்கள் நின்று பின்னர் பேரணியாக சென்றனர். தலைமை ஆசிரியர் ஹேமலதா தலைமை வகித்தார். இதில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Quiz Competition ,Government College Students ,
× RELATED வாக்காளர் தின விழிப்புணர்வு வினாடி வினா போட்டி ஜன.21ம் தேதி நடக்கிறது